மகிழ்ச்சியுடன் பாடிய ரம்யா நம்பீசன்

1 mins read
286614a6-2165-477c-b811-6f8e38e5a8d3
-

நடிப்பதை விரும்பிச் செய்வது போலவே திரைப்பாடகியாகப் பயணம் செய்வதையும் பெரிதும் விரும்பிச் செய்வதாகச் சொல்கிறார் ரம்யா நம்பீசன். இவரது குரலில் மேலும் ஒரு திரைப்பாடல் ஒலிக்கப் போகிறது. 'அருவா சண்ட' படத்தில், தரண் இசையில், வைரமுத்து எழுதியுள்ள பாடலைப் பாடியுள்ளார். 'சிட்டு சிட்டுக் குருவி வாலாட்டுதோ தொட்டுத் தொட்டு இழுத்து தாலாட்டுதோ' எனத் தொடங்கும் அப்பாடல் ரம்யாவை வெகுவாகக் கவர்ந்துவிட்டதாம். "இதுபோன்ற பாடல்களைப் பாடும் வாய்ப்பு அமையும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தொடர்ந்து பாடகியாகப் பயணம் செய்யவேண்டும் என்ற எண்ணத்தை இதுபோன்ற பாடல்கள் ஏற்படுத்துகின்றன," என்கிறார் ரம்யா.

மேலும்