"நல்ல ரசனை என்பது காதல் மாதிரி நெகிழ வைக்கும். எதையுமே ரசித்துச் செய்தால் உங்களை மீறி எல்லாம் இயல்பாக வெளிவரும். நீங்கள் வெளியில் எங்கோ போய்ச் சாப்பிட்டு வந்தாலும், வீட்டில் அம்மா சமைத்ததைச் சாப்பிட்டால் வயிறு நிறைந்தது மாதிரி இருக்கும் அல்லவா? "அப்படி அம்மா பண்ற சாப்பாடுதான் இப்படி பிரியப்பட்டு நடிக்கிற நடிப்பு. நடிகன் மற்றவர்களை ஈர்க்க வேண்டும். உங்களை எதிர்நோக்கி வருகிற வரின் புன்னகையில் தெரிவது உண்மையான அன்பா இல்லையா என உணரத் தெரிய வேண்டும். அதற்கான ஆசிரியர் நமக்குள்ளேதான் இருக்கிறார். உள்ளே இருக்கும் அவரை ஏமாற்றி னால் வெளியே இருக்கும் மக்கள் உங்களை ஏமாற்றிவிடுவார்கள் என்கிறார் விஜய்சேதுபதி
'நல்ல ரசனை காதல்போல் நெகிழ வைக்கும்'
1 mins read
-

