தற்காப்புக் கலைகளைக் கற்றுக் கொண்டதால் தனக்கு மனக்கட்டுப்பாடு அதிகம் என்கிறார் நடிகை நிவேதா பெத்துராஜ். தற்காப்புக் கலைகளில் தேர்ச்சி பெற்றதால் 'டிக் டிக் டிக்' படத்தில் நடிப்பது சுலபமாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார். விண்வெளிக் கதையை மையப்படுத்தி உருவாகி வருகிறது இப்படம். இதில் ஜெயம் ரவியுடன் ஜோடி சேர்ந்துள்ள நிவேதாவுக்கு விண்வெளி வீராங்கனை வேடமாம். பெண்கள் அனைவருமே தற்காப்புக் கலையில் தேர்ச்சி பெறவேண்டும் என்கிறார் நிவேதா. "எனக்கு பல தற்காப்புக் கலைகள் தெரியும். தாய்லாந்தில் இது தொடர்பாக இரண்டு ஆண்டுகள் படித்து இருக்கிறேன். குத்துச்சண்டையும் நன்றாக தெரியும். அதனால் என் உடல் எப்போதும் கட்டுக்கோப்பாக இருக்கும். "தற்காப்புக் கலைகள் தைரியத்தை அதிகரிக்கச் செய்யும். பெண்கள் எதிலும் தைரியத்துடன் செயல்பட வேண்டும்," என்கிறார் நிவேதா.
நிவேதா: மனக் கட்டுப்பாடு அதிகம்
1 mins read
-

