விஜய் சேதுபதி - அஞ்சலி படப்பிடிப்பு துவங்கியது

விஜய் சேதுபதி - அஞ்சலி படப்பிடிப்பு துவங்கியது

1 mins read
83b6b5d2-ffa5-499d-ba8a-1970def61518
-

பண்ணையாரும் பத்மினியும்', 'சேதுபதி' ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய் சேதுபதியை மூன்றாவது முறையாக இயக்குகிறார் அருண்குமார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தென்காசி பக்கத்தில் உள்ள இலஞ்சியில் பூசையுடன் துவங்கி நடைபெறுகிறது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். வில்லனாக லிங்கா நடிக்கிறார். அதிரடி ஆக்ஷன் படமாக உருவாக இருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்புத் தென்காசியைத் தொடர்ந்து மலேசியாவில் நடைபெறவிருக்கிறது. காரணம் இந்தப்படத்தின் தயாரிப்பாளர் மலேசியாவைச் சேர்ந்தவர். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பதோடு, படத்தின் தயாரிப்பிலும் இணைந்துள்ளார்.

மேலும் செய்திகள்