தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் 'பிளாஸ்டிக்' பொருட்களைத் தயாரிக்கவோ விற்பனை செய்யவோ பயன்படுத்துவதோ கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு நடிகரும் சமூக சேவகருமான ஆரி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். இவர் பல ஆண்டுகளாக பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது எனப் போராடியிருக்கிறார்.
குறிப்பாக தனது பட பூசை விழாவிலும் 'மாறுவோம் மாற்றுவோம்' அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற உலக கின்னஸ் சாதனை நிகழ்ச்சியிலும் அவர் 'பிளாஸ்டிக்' பொருட்களை பயன்படுத்தாமல் விழா ஏற்பாடு செய்திருந்தார். இவர் பல கல்லூரிகளில் விழிப்புணர்வு பிரசாரமும் செய்து வருகிறார். எனவே தனது ஆசையைத் தமிழக அரசு நிறைவேற்றியுள்ளதாக தமிழக அரசு முதல்வர் எடப்பாடிப் பழனிசாமிக்கு தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார் நடிகர் ஆரி.

