'இரும்புத்திரை' ஆந்திராவில் மகத்தான வெற்றி

'இரும்புத்திரை' ஆந்திராவில் மகத்தான வெற்றி

1 mins read
544c91fa-c7b9-45c6-812c-2b383fd0e90d
-

நடிகர் விஷால், சமந்தா, அர்ஜூன் நடிப்பில் வெளியான 'இரும்புத்திரை' படம் தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பைப் பெற்றது. விஷால் படங்களிலேயே இதுதான் அதிக வசூலை ஈட்டியது. இந்தப் படத்தை தெலுங்கில் 'அபிமன்யுடு' என்ற பெயரில் மொழி மாற்றம் செய்து வெளியிட்டனர். அங்கும் இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. நேரடி தெலுங்கு படத்திற்கு நிகரான வசூலை இந்தப் படம் பெற்றிருக்கிறது. இதுவரை ரூ.12 கோடிக்கும் மேல் வசூலித்து நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும் ரூ.25 கோடியைத் தாண்டக்கூடும் என்று கூறுகின்றனர். அதனால் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கத் திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.