விக்ரம் பட முன்னோட்டம்: ஒரு கோடி பேர் பார்த்து ரசித்தனர்

விக்ரம் பட முன்னோட்டம்: ஒரு கோடி பேர் பார்த்து ரசித்தனர்

1 mins read
7a372fef-2eaf-4b3b-84d2-28e842d9c56b
-

'சாமி-2' படத்தின் முன்னோட்டக் காட்சியை 1 கோடி பேர் பார்த்து ரசித்துள்ளனராம். இதனால் படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். கடந்த வாரம்தான் இந்த முன்னோட்டம் வெளியானது. ஒரே வாரத்தில் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. விக்ரம் ரசிகர்கள் இந்த முன்னோட்டக் காட்சிகளை வெகுவாகப் பாராட்டினாலும் மற்றொரு தரப்பு கேலி செய்து வருகிறது. குறிப்பாக விக்ரம் பேசும் வசனங்களைக் கிண்டல் செய்து சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டுள்ளனர். ஆனால் இது குறித்துப் படக்குழுவினர் சற்றும் அலட்டிக் கொள்ளவில்லை. மாறாக, படத்தை அக்டோபரில் வெளியிடும் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்