ரமேஷ்: வேடிக்கை மட்டும் பார்க்கக்கூடாது

ரமேஷ்: வேடிக்கை மட்டும் பார்க்கக்கூடாது

1 mins read
8d7fdd24-30eb-4024-a274-635e674af619
-

ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கிய சம்பவத்தை மையமாக வைத்து 'நுங்கம்பாக்கம்' என்ற படத்தை உருவாக்கி உள்ளார் இயக்குநர் எஸ்.டி. ரமேஷ். இவர் ஏற்கெனவே விஜயகாந்த் நடித்த 'உளவுத்துறை', 'ஜனனம்', 'கலவரம்' ஆகிய படங்களை இயக்கிய அனுபவம் உள்ளவர். சென்னையில் உள்ள ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி படுகொலை செய்யப்பட்ட சம்ப வத்தைப் படமாக்கி வருகிறார் ரமேஷ்.

ஒரு கொலை வழக்கின் விசாரணை நடந்து கொண்டி ருக்கும்போதே அதைத் திரைப்பட மாக எடுப்பது அநேகமாக இதுவே முதல்முறை என்கிறார்கள் கோடம்பாக்க விவரப் புள்ளிகள். எனவே மிகுந்த கவனத்துடன் செயல்பட்டுள்ளாராம் ரமேஷ். தொடக்கத்தில் 'சுவாதி கொலை வழக்கு' என்ற நேரடித் தலைப்பைத்தான் படத்துக்குச் சூட்டியிருந்தார்களாம். இதற்குப் பலவிதமாக எதிர்ப்புக் கிளம்ப, வேறு வழியின்றி தலைப்பை மாற்றியுள்ளார். அதுமட்டுமல்ல, சுவாதியின் குடும்பத்தார், தணிக்கைத் துறையினர் என வேறு சிலரது ஆட்சேபங்களையும் எதிர்கொண்ட காரணத்தால் நிறைய காட்சிகளை மாற்றி அமைக்க வேண்டி இருந்ததாம். "தனக்குப் பிரச்சினை நேரும் போது மட்டுமே பலரும் தவிக்கி றார்கள். மற்றவர்களுக்கு நேரி டும்போது வேடிக்கை மட்டுமே பார்க்கத் தயாராக இருக்கிறார்கள். அப்படி இருக்கக்கூடாது என் பதை அழுத்தமாகச் சொல்லியுள் ளேன்," என்கிறார் ரமேஷ்.

மேலும் செய்திகள்