எழில் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் 'ஜெகஜால கில்லாடி'. இதில் விஷ்ணு விஷால் நாயகனாகவும் நிவேதா பெத்துராஜ் நாயகியாகவும் நடிக்கின்றனர். இமான் இசையமைக்கும் இப்படத்தை ராம்குமார் தயாரிக்கிறார். முக்கால்வாசி படப்பிடிப்பு முடிந்த நிலையில் படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. "வழக்கம்போல் இந்தப் படத்தின் மூலமாகவும் ரசிகர்களைச் சிரிக்க வைக்கப் போகிறோம். கவலையுடன் திரையரங்குக்குள் நுழைபவர்களும்கூட மலர்ந்த முகத்துடன் சிரித்தபடியே வெளியே வருவார்கள்," என்கிறார் இயக்குநர் எழில்.
'ஜெகஜால கில்லாடி'
1 mins read
-

