ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகும் மூன்றாவது படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. வழக்கம்போல் இதற்கும் வித்தியாசமான தலைப்பு வைத்துள்ளார். 'ஜிப்ஸி' என்ற பெயரில் உருவாகிவரும் இப்படத்தில் ஜீவா நாயகனாக நடிக்கிறார். அவரது ஜோடியாக இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த நடாஷா சிங் ஒப்பந்தமாகி உள்ளார். ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது இப்படம். 'குக்கூ' படத்தின் மூலம் இயக்கு நராக அறிமுகமானவர் ராஜுமுருகன். அதற்கு முன் பத்திரிகையாளராகப் பணியாற்றி வந்தார். 'குக்கூ' பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றது.
'ஜிப்ஸி' படத்தின் ஒரு காட்சியில் ஜீவா, நடாஷா சிங்.

