தற்போது விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையையும் விளையாட்டையும் மையப்படுத்தி பல படங்கள் உருவாகி வருகின்றன. அந்த வகையில் கபடி விளையாட்டை மையமாக வைத்து இந்திப் படம் ஒன்று உருவாகிறது. இதில் கங்கனா ரணவத் நாயகியாக நடிக்கிறார். சந்தேகம் வேண்டாம், அவர் கபடி வீராங்கனையாகத் தான் நடிக்கிறாராம். தமிழில் தனுஷ் தயாரிப்பில் அமலா பால் நடித்த 'அம்மா கணக்கு' படத்தை இயக்கியவர் அஸ்வினி ஐயர் திவாரி இப்படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் நடிப்பதற்காக கபடி நுணுக்கங்களைத் தெரிந்துகொள்ள இருக்கிறாராம் கங்கனா. கபடி விளையாடி பயிற்சி பெறவும் இருக்கிறார். இதற்கிடையே நடிப்பில் அடுத்து, 'மணிகார்னிகா: தி குயின் ஆப் ஜான்சி' என்ற படம் வெளியாகிறது.
படத்துக்காக கபடி கற்கும் கங்கனா
1 mins read
-

