நயன் படத்தின் படப்பிடிப்பு துவக்கம்

நயன் படத்தின் படப்பிடிப்பு துவக்கம்

1 mins read
fd5c270f-3d1b-4669-9784-11d9d1134fa8
-

'அறம்' படத்தை அடுத்து 'கோலமாவு கோகிலா'வில் நடித்து வருகிறார் நயன்தாரா. இந்நிலையில் அவர் நடிக்கும் அடுத்த படத்துக்கான படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது. இதை கே.எம். சர்ஜுன் இயக்குகிறார். இப்புதிய படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இதற்கு முன்பு 'லட்சுமி', 'மா' ஆகிய குறும்படங்களை இயக்கி மக்களின் கவனம் ஈர்த்தவர் சர்ஜுன். இரண்டுமே பாலியல் தொடர்பான குறும்படங்கள் என்பதால் பரவலாகப் பலரால் பார்க்கப்பட்டு, விமர்சிக்கப்பட்டது. சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் விவாதங்களை எழுப்பிய இக்குறும்படங்களை அடுத்து 'எச்சரிக்கை: இது மனிதர்கள் வாழும் இடம்' என்ற முழுநீள திரைப்படத்தையும் இயக்கியுள்ளார் சர்ஜுன். இந்நிலையில் இவரது இயக்கத்தில் நயன்தாரா நடிப்பதாகவும் 'அறம்' படத்தைத் தயாரித்த கோட்டபாடி ராஜேஷ் இதைத் தயாரிப்பதாகவும் அறிவிப்பு வெளியானது. தற்போது படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு