அதர்வா நடிக்கும் 'பூமராங்'

1 mins read
82118a93-7b12-480d-be2d-fb82d8990ff2
-

ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் 45 நாட்களில் முடித்து அசத்தியுள்ளது 'பூமராங்' படக்குழு. இது முழுநீள அதிரடிப் படமாம். நாயகன் அதர்வா, நாயகிகள் மேகா ஆகாஷ், இந்துஜா ஆகியோரின் ஒத்துழைப்பு இல்லாமல் பட வேலைகளை குறித்த நேரத்தில் முடித்திருக்க இயலாது என்கிறார் இயக்குநர் கண்ணன். தற்போது தொழில்நுட்பப் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் மாதம் படம் திரைக்கு வருமாம். "முழுப் படமும் அதர்வாவை சார்ந்துள்ளது. அவர் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்தார். திரையில் மூன்று வித்தியாசமான தோற்றங்களில் அசத்துவார்," என்கிறார் கண்ணன்.