பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் அடுத்து வெளியாக இருக்கிறது 'யார் இவர்கள்'. இதில் இசக்கி கிஷோர், அஜய், அபிராமி, ராம், பாண்டியன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜாவத் ரியாஸ் இசைய மைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்துக்கு முன்பு தாம் இயக்கிய 'ரா.ரா. ராஜசேகர்' வெளியாகாமல் இருப்பது தமக்கு மிகுந்த கவ லையை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறியுள்ளார் பாலாஜி சக்திவேல். "இதுகுறித்துக் கேள்வி எழுப்புவோருக்கு என் நிலை மையை எப்படி புரியவைப்பது என்று தெரியவில்லை. வயிற்றில் இருக்கும் குழந்தை குறைப் பிரசவத்தில் பிறந்துவிட்டால் அழுது ஒப்பாரி வைக்கலாம். அத்துடன் விஷயம் முடிந்தது.
"ஆனால், குழந்தை இன்கு பேட்டரில் இருக்கும்போது இன்னொரு குழந்தை பிறந்து, அந்தக் குழந்தைக்கு ஒரு தாயால் நிம்மதியாகப் பால் கொடுக்க முடியுமா? அப்படி ஒரு மனநிலை யில்தான் இருக்கிறேன்," என்கி றார் பாலாஜி சக்திவேல். எனினும் 'ரா.ரா. ராஜசேகர்' எப்போது வெளியானாலும் வெற்றிகரமாக ஓடும் எனும் நம்பிக்கை இருக்கிறதாம். அப் படம் வெளியாகும் நாளுக்காக காத்திருப்பதாகச் சொல்கிறார் பாலாஜி சக்திவேல். "என்னைப் பொறுத்தவரை எந்தவிதமான குறைகளும் இன்றி அப்படம் உருவாகியுள்ளது. எனவே ரசிகர்களைக் கவரும்," என்றும் பாலாஜி கூறுகிறார்.

