ஐஏஎஸ் படிக்கும் மாணவியாக பிந்து

ஐஏஎஸ் படிக்கும் மாணவியாக பிந்து

1 mins read
81873d99-793d-4b98-a1c4-b1bc2a7b569d
-

ஐஏஎஸ் தேர்வுக்குத் தயாராகும் பெண்ணாக நடித்தது நல்ல அனுபவமாக அமைந்தது என்கிறார் பிந்து மாதவி. கரு.பழனியப்பன் இயக்கத்தில் உருவகும் 'புகழேந்தி எனும் நான்' படத்தில் தான் இப்படியொரு கதாபாத்திரம் அமைந்துள்ளதாம். "இந்தக் கதாபாத்திரமும் படமும் நிச்சயம் எனக்கு நல்ல பெயர் வாங்கித்தரும். அதற்காக இயக்குநருக்கு முன்கூட்டியே எனது நன்றி. "வாழ்க்கையில் ஒருமுறை 'பிக் பாஸ்' வீட்டுக்குள் இருந்து விட்டேன், அதுவே போதும். இன்னொரு முறை அது நடக்காது. "அப்படி வாய்ப்பு வந்தாலும் பிக்பாஸ் வீட்டுக்குள் போக மாட்டேன். ஆனால் எப்போதாவது விருந்தாளி போல அழைத்தால் போகலாம்," என்கிறார் பிந்து. இந்தப் போட்டியில் பங்கேற்பவர்கள் தங்கள் சுயத்தை உணர்ந்து, இயல்பாக இருந்தாலே போதும், வெற்றி வசமாகும் என்பதுதான் பிந்துவின் அறிவுரையாம்.