ஜூலை 13ல் 'கடைக்குட்டிச் சிங்கம்' வெளியீடு

ஜூலை 13ல் 'கடைக்குட்டிச் சிங்கம்' வெளியீடு

1 mins read
127a6c97-a605-4709-9ad9-ae4946b60c71
-

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நாயகனாக நடித்துள்ள படம் 'கடைக்குட்டி சிங்கம்'. அவருடன் சாயிஷா சைகல், பிரியா பவானி சங்கர், அர்த்தனா உள்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். விவசாயப் பின்னணியில் குடும்பப் பாங்கான படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் கார்த்தி விவசாயி வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

ஜூலை மாதம் 13ஆம் தேதி படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். "நகரத்தில் வேலை செய்யும் எல்லோரையும் கிராமத்துக்கு வந்து விவசாயம் செய்யவைக்கும் ஒரு படமாக 'கடைக்குட்டிச் சிங்கம்' இருக்கும். நான் அண்ணன் சூர்யா தயாரிப்பில் நடிப்பேன் என்று நினைத்துக்கூட பார்த்தது இல்லை. அவர் தயாரிப்பில் நடித்தது மகிழ்ச்சி. முதன்முறை யாக நாங்கள் இணைந்து பணியாற்றியுள்ளோம். கூடிய சீக்கிரம் நாங்கள் இருவரும் சேர்ந்து நடிப்போம்," என்கிறார் கார்த்தி.