'ஆத்ம பரிசோதனை முக்கியம்'

'ஆத்ம பரிசோதனை முக்கியம்'

1 mins read
2d750661-6b67-4dda-809e-2106c33965fc
-

எவ்வளவு நெருக்கமான நண்பர்களாக இருந்தாலும் சொந்த விஷயங்கள் அனைத்தையும் அவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியாது என்கிறார் திரிஷா. ஒவ்வொருவரும் தமக்குத் தாமே துணை என்ற எண்ணத்துடன் இருக்கவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். திரிஷா சினிமாவில் நடிக்கத் துவங்கி கிட்டத் தட்ட 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போதும்கூட கைவசம் அரை டஜன் படங்களை வைத்துள்ளார். இவரது நடிப்பில் 'மோகினி' உள்ளிட்ட மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இந்நிலையில் மன அழுத்தத்தில் இருந்து எவ்வாறு விடுபடுவது, நண்பர்களுடன் எப்படிப் பழகுவது என்பது குறித்து சில ஆலோசனைகளை அளித் துள்ளார் திரிஷா.

ஒவ்வொருவரும் சுயபரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்பது திரிஷாவின் முக்கிய ஆலோசனை. "தினமும் ஒருமுறையேனும் நமக்கு நாமே 'ஹலோ' சொல்லிக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு வரும் தங்களை ஆத்ம பரிசோதனை செய்துகொள்ள வேண்டியதும் முக்கியம்.

"வாழ்க்கையில் தினமும் நிறைய பேரைச் சந்திக்கிறோம். நான் எதிர்கொள்ளும் பலர் திடீரென வணக்கம் சொல்லிவிட்டுச் செல்கிறார்கள். அவர்க ளில் சிலருடன் பேசவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். "அவர்களிலும் சிலர் நண்பர்களாக மாறிவிடுவர். அதற்காக சொந்த விஷயங்கள் அனைத்தையும் அவர்களுடன் பகிர்ந்துகொள்ள இயலாது," என்கிறார் திரிஷா.