ஜெயம் ரவி நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கிறது 'டிக் டிக் டிக்'. இதில் அவரது ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். இது முழுக்க முழுக்க விண்வெளியை மையப்படுத்தி உருவாகியுள்ள படம். சிங்கப்பூரைச் சேர்ந்த ஆரோன் ஆசிஸ் வில்லனாக நடிக்க, ஜெயபிரகாஷ், ரமேஷ் திலக், வின்சன்ட் அசோகன், ஜெயம் ரவியின் மகன் ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். எதிர்வரும் 22ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தை சக்தி சவுந்தரராஜன் இயக்கியுள்ளார். இது இசையமைப்பாளர் இமான் இசையில் வெளியாகும் 100வது படமாம். இதில் யுவன் சங்கர் ராஜா ஒரு பாடலைப் பாடியுள்ளார்.
'டிக் டிக் டிக்'
1 mins read
-

