சீனாவில் ரசிகர்களைக் கவர்ந்த இயக்குநர் ராமின் 'பேரன்பு'

சீனாவில் ரசிகர்களைக் கவர்ந்த இயக்குநர் ராமின் 'பேரன்பு'

1 mins read
f0734fd7-9544-4cfb-a407-11108fa05cb3
-

'பேரன்பு' திரைப்படம் 21ஆவது ஷங்காய் அனைத்துலக திரைப்பட விழாவில் ஆசியாவின் முதல் பிரத்யேக காட்சி கடந்த 16ஆம் தேதி திரையிடப்பட்டது. ஷங்காய் ஹாங்கௌ ஜின்யி சினிமா அரங்கில் நடைபெற்ற முதல் காட்சியின்போது சீன பார்வையாளர்களால் அரங்கு நிறைந்தது. திரைப்படம் முடிந்த பின் அனைத்து பார்வையாளர்களும் எழுந்து நின்று தங்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

திரையரங்கிற்கு வெளியே காத்திருந்த இயக்குநர் ராம், 'தங்கமீன்கள்' சாதனா மற்றும் தயாரிப்பாளர் பி.எல். தேனப்பன் ஆகியோரிடம் பார்வையாளர்கள் தங்கள் அன்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர். 17ஆம் தேதி 'பேரன்பு' திரைப்படத்தின் இரண்டாவது காட்சி ஷங்காய் நகரின் அரோரா இன்டர்நேஷனல் சினிமா அரங்கில் திரையிடப்பட்டது. இக்காட்சிக்குப்பின் திரைப்பட விழா குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பார்வையாளர்கள் பங்குபெறும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இயக்குநர் ராம், சாதனா, தேனப்பன் பங்கேற்றனர். நிகழ்வரங்கில் இயக்குநர் ராமையும் சாதனாவையும் சூழ்ந்து கொண்டு பேட்டி காணும் ஊடகவியலாளர்களை இப்படத்தில் காணலாம்.