தாம் ஒரு கண்டிப்பான தாயாக நடந்து கொள்வதாகக் கூறுகிறார் ஜோதிகா. அதேசமயம் குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதில் தம்மைவிட, கணவர் சூர்யாதான் சிறந்தவர் என்றும் பாராட்டுகிறார். "பெண்களுக்கு முக்கியத்துவ ம் தரக்கூடிய, நன்கு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கதைகளாக இருந்தால் மட்டுமே நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். என் குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு வந்து நடிக்கிறேன். அந்த அளவுக்கு முக்கியத்துவம் உள்ள கதையாகவும் கதாபாத்திரமாகவும் இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பதில் தவறில்லை. "குழந்தைகளைக் கவனிப்பதில் என் கணவரே சிறந்தவர். ஏனெனில் அவர்கள் என்ன விரும்புகிறார்களோ, அதைச் செய்ய விடுவார். நான் கொஞ்சம் கண்டிப்பான தாய்," என்கிறார் ஜோதிகா.
ஜோதிகா: நான் கண்டிப்பான தாய்
1 mins read
-

