வெங்கட் பிரபுவின் 'ஜருகண்டி'

1 mins read
90a552c3-8daf-49d9-8501-4269a342f053
-

வங்கியில் கடன் பெற்று, அதன் சுமை தாங்காமல் அவதிப்படும் இளையர் வேடத்தில் நடித்துள்ளார் ஜெய். படத்தின் பெயர் 'ஜருகண்டி'. இது வேறொரு படத்துக்காக இயக்குநர் வெங்கட்பிரபு தேர்வு செய்து வைத்திருந்த தலைப்பாம். அவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பிச்சுமணி, தனியாக ஒரு படத்தை இயக்குவது தெரிய வந்ததும், இந்தத் தலைப்பை தாமே முன்வந்து விட்டுத் தந்துள்ளார். 'ஜருகண்டி'யை தயாரிப்பது நடிகர் நிதின் சத்யா. சொந்தப் படத்தில் தனது நண்பரையே நாயகனாக்கி உள்ளார்.

"பிச்சுமணியை 'சென்னை 28' படம் உருவான சமயத்தில் இருந்தே நன்கு தெரியும். அதன் பிறகு 'மங்காத்தா', 'சரோஜா' எனப் பல படங்களில் அவரது வேலை பிடித்துப் போனது. இந்தப் படத்தை சரியாக 46 நாட்களில் முடித்துவிட்டோம்.