தீபாவளிப் போட்டியில் களமிறங்கும் விஷாலின் 'சண்டக்கோழி 2'

தீபாவளிப் போட்டியில் களமிறங்கும் விஷாலின் 'சண்டக்கோழி 2'

1 mins read
513e591e-47b1-43c4-b0b9-7a075134850e
-

எதிர்வரும் தீபாவளிக்கு நான்கு பெரிய படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் நடிக்கும் 'தளபதி 62', அஜீத்தின் 'விசுவாசம்', சூர்யாவின் 'என்ஜிகே' ஆகியவை தீபாவளிக்கு வெளியாவது உறுதி என சம்பந்தப்பட்ட படங்களின் தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் விஷாலும் தீபாவளிப் போட்டியில் களம் இறங்கியுள்ளார். அவர் தற்போது நடித்து வரும் 'சண்டக்கோழி-2' படம் தீபாவளிக்கு வெளியாக வாய்ப்புள்ளதாம். இதில் கீர்த்தி சுரே‌ஷுடன் ஜோடி சேர்ந்துள்ளார் விஷால். லிங்குசாமி இப்படத்தை இயக்குகிறார். முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் அதிரடி சண்டைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளனவாம். எனவே, தீபாவளிப் போட்டி களைகட்டும் என ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.