இதுவே எனது அடையாளம் - ஸ்வேதா திரிபாதி

இதுவே எனது அடையாளம் - ஸ்வேதா திரிபாதி

1 mins read
eb4619ea-4f58-4e01-8bf0-b2c6d9d63962
-

சரவணன் ராஜேந்திரன் இயக்கும் பெயரி டப்படாத படத்தின் மூலம் கோடம்பாக் கத்தில் கால் பதிக்கிறார் ஸ்வேதா திரிபாதி. இந்தியில் இவர் நடித்த 'மாஸான்' படம் பெரும் வெற்றி பெற்றுள்ளது. மேலும், சில விருதுகளையும் பெற்றி ருப்பதால் பாலிவுட்டில் கவனிக்கத் தக்க நட்சத்திரமாக உருவெடுத்துள் ளார் ஸ்வேதா. கோடம்பாக்கம் பிடித்திருக்கிறதா என்று கேட்டால், "ரொம்பவே பிடித்திருக்கிறது," என்று தெளிவாகவும் வேக மாகவும் பதில் வருகிறது. "பொதுவாக என் உள்ளுணர்வு என்ன சொல்கிறதோ அதைக் கொண்டே எதிலும் நான் முடிவெடுப்பேன். படங்களைத் தேர்வு செய்வதும் இப்படித் தான். "இப்படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளரும் என்னைக் காண மும்பை வந்திருந்தனர்.

முதலில் ஒரு வரியில் கதை சொன் னார் இயக்குநர். அது திருப்திகரமாக இருந்தது. எனவே, அடுத்த நிமிடமே எனது சம்மதத்தைத் தெரிவித்தேன். "இதில் மாற்று யோசனைக்கே இடமிருக்க வில்லை. பின்னர் சென்னை திரும் பிய இருவரும் எனக்குத் திரைக் கதையை அனுப்பி வைத்தனர். பிறகு மீண்டும் ஒருமுறை நேரில் சந்தித்தபோது கதையை விலாவாரி யாக விவரித்தார் இயக்குநர். எந்த மொழி, எந்த மேடை, எந்த ஊடகம் என்றெல்லாம் நான் யோசிப்பதே இல்லை," என்கிறார் ஸ்வேதா.

மேலும் செய்திகள்