வில்லனாக நடிக்கவும் அருண் விஜய் தயாராகி சில ஆண்டுக ளாகி விட்டது. முதலில் 'என்னை அறிந்தால்' படத்தில் அஜித்துடன் மோதியவர் தற்போது தெலுங்கு நாயகர்களுக்கும் வில்லனாகி உள்ளார். இந்நிலையில் அண்மைய பேட்டி ஒன்றில் அஜித்தின் அன் பான பேச்சும் பெருந்தன்மையும் தன்னை வெகுவாகக் கவர்ந்த அம்சங்கள் என்று கூறியுள்ளார் அருண் விஜய்.
'என்னை அறிந்தால்' இரண் டாம் பாகம் உருவாக வேண்டும் என தாம் விரும்புவதாகவும், அதில் மீண்டும் அஜித்துடன் இணைந்து நடிக்க வேண்டும் எனும் எதிர்பார்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார். இந்த ஆண்டு வெளியான படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்த 'நடிகையர் திலகம்' இவரை வெகுவாக ஈர்த்துள்ளதாம். தாம் நடிகை அனுஷ்காவின் தீவிர ரசிகர் என்றும் கூறுகிறார்.
'என்னை அறிந்தால்' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில் அஜித், அருண் விஜய்.

