கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் நடிப்பதையே தற்போது பெரும்பாலான நடிகைகள் விரும்புகின்றனர். அப்படி ஒரு வாய்ப்பு சமந்தாவுக்கும் அமைந்துள்ளது. தெலுங்கில் வெளியான 'அர்ஜுன் ரெட்டி' படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கிரிசாயா என்பவர் படம் ஒன்றை இயக்குகிறார். அதில் நடிக்க சமந்தாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். படத்தின் திரைக்கதை யைக் கேட்ட அடுத்த நிமிடமே சம்மதம் தெரிவித்தாராம் சமந்தா. இது முழுக்க முழுக்க கதாநாயகியை மையப்படுத்தி உருவாகும் படமாம். ஆகஸ்டு மாதமே படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. அநேகமாக ஆண்டு இறுதிக்குள் படம் தயாராகிவிட வாய்ப்புள்ளது. தமிழில் சமந்தா நடிப்பில் 'சீமராஜா', 'சூப்பர் டீலக்ஸ்', 'யு டர்ன்' உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
கதாநாயகியை மையப்படுத்தும் கதை
1 mins read
-

