இப்போது என்ன அவசரம்?'

இப்போது என்ன அவசரம்?'

1 mins read
57b5100f-5c62-40f7-b918-909d70111c26
-

தனது காதலரான ரஷ்யாவைச் சேர்ந்த ஆண்ட்ரீவ் கோச்சேவ் என்பவரை அண்மையில் திருமணம் செய்துகொண்டார் ஸ்ரேயா. அதையடுத்து தெலுங்கில் 'வீரபோக வசந்த ராயலு' என்னும் படத்திலும் 'ஒரு மல்டி ஹீரோ' என்னும் படத்திலும் நடித்துவருகிறார். இந்நிலையில், ஸ்ரேயா அளித்துள்ள ஒரு பேட்டியில், "திருமணம் செய்து கொண்டபோதும் இப்போதைக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் இல்லை. அதற்கு இப்போது அவசரமில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், இன்னும் 20 படங்களில் நடித்த பிறகே அதைப்பற்றி யோசிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அந்த வகையில் திருமணம் அவரது திரையுலக வாழ்க்கைக்கு எவ்விதத்திலும் தடையாக இல்லை என்றும் கூறியுள்ளார் ஸ்ரேயா.