கவர்ச்சி சரி; ஆபாசம் தவறு - சாந்தினி

கவர்ச்சி சரி; ஆபாசம் தவறு - சாந்தினி

2 mins read
89faa025-76a0-47d0-860b-7b95379e32bb
-

திரைப்படங்களில் கவர்ச்சிக்கு நீங்கள் வகுத் துள்ள எல்லை எதுவரை என்ற திரைச் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்த சாந்தினி, கதைக்குத் தேவையென்றால் கவர்ச்சி காட்டுவதில் தவறில்லை என்று கூறி யுள் ளார். "கதைக்குத் தேவையான கவர்ச்சி என்றால் நடித்துத் தானே ஆக வேண்டும். திரையில் பார்க்கும்போது, அருவெறுப்பின்றி எல்லோரை யும் கவரும் வகையிலான கவர்ச்சியில் நடிப்பது தவறேயில்லை. அதேநேரத்தில், ரொம்ப ஆபாச மாக நடிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. கவர்ச்சி வேறு, ஆபாசம் வேறு," என்றார்.

"எப்படி நடித்தாலும், தணிக்கை செய்யப்- பட்டுத்தான் படம் வெளிவரப்போகிறது. பொது வாகச் சொல்ல வேண்டுமெனில் ரசிகர்கள் மத்தியில் பெயரைக் கெடுத்துக் கொள்ளக்கூடாது. இயக்குநர் பாக்யராஜின் மகன் சாந்தனு வுடன் நாயகியாக அறிமுகமானவர் சாந்தினி. அதன் பின் திரை உலகில் இருந்து காணாமல் போய்விட்டார். தற்போது, அவர் ஐந்து படங்களுக்கு மேல் நடித்து வருகிறார்.

மேலும் அவர் திரையுலகிற்கு வந்த கதையைச் செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண் டார். "கடந்த 2008ல் சென்னை அழகிப் போட்டி யில் இரண்டாவதாக வந்த என்னைப் பார்த்து, 'சித்து+2' படத்திற்கு நாயகியாக அழைத்தனர். என் முதல் படமே சிறப்பாக அமைந்தது. அப்போது, பள்ளியில் படித்துக்கொண்டிருந் தேன். பாக்யராஜ் சார் பார்த்து என்னை அந்தப் படத்தில் நாயகியாக்கினார்.

"முதல் படம் ஒப்பந்தமானபோது, பிளஸ்2 படித்துக் கொண்டிருந்தேன். அப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே, எத்திராஜ் கல்லூரியில் சேர்ந்தேன். முதலில் கல்லூரிப்படிப்பை முடிக்க வேண்டும் என நினைத்தேன். அதனால், முதல் படத்தைத் தொடர்ந்து, உடனடியாக எந்தப் படத்திலும் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை.