ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் `ஜிப்ஸி' படத்தில் நாயகியாக நடித்து வரும் நடாஷா சிங், தமிழக ரசிகர்களைப் பார்த்து ஆச்சரியம் அடைந்துள்ளாராம். இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்காலில் துவங்கியது. முதல் படத்தில் நடித்து வரும் நடாஷாவுக்கு அதற்குள்ளாகவே தமிழில் புது வாய்ப்புகள் தேடி வரத் தொடங்கி இருக்கின்றன. நாகப்பட்டினத்தில் படப்பிடிப்பை வேடிக்கை பார்த்த மக்கள் அவரிடம் ஆசையாக கையெழுத்து வாங்கினார்களாம். "தமிழ் திரைப்படத்தில் நடிப்பேன் என்று கனவில்கூட எதிர்பார்க்கவில்லை. அதிலும் தமிழ் ரசிகர்கள் என்னை இவ்வளவு வேகமாக அடையாளம் கண்டு கொண்டது ஆச்சரியம் அளிக்கிறது," என்கிறார் நடாஷா.
'ஜிப்ஸி' படப்பிடிப்பில் ஆச்சரியப்பட்டுப் போன நடாஷா
1 mins read
-

