ஓவியா வெளியிட்ட புகைப்படங்களால் பரபரப்பு

ஓவியா வெளியிட்ட புகைப்படங்களால் பரபரப்பு

1 mins read
c584d797-278b-4eef-af30-ed4adc98359b
-

ஓவியா பற்றி எந்தச் செய்தி வெளி யானாலும் அது பரபரப்பானதாகவே இருக்கிறது. தற்போது நடிகர் ஆரவுடன் நெருக்கமாக உள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் ஓவியா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரவிடம் இவர் தனது காதலை வெளியிட்டார். ஆனால், காதல் கைகூடவில்லை. இந்நிலையில் பிக்பாஸ் தந்த புகழ் காரணமாக நான்கு படங்களில் ஒப்பந்தமாகி மீண்டும் பரபரப்புடன் நடித்துக் கொண்டிருக்கிறார் ஓவியா. 'ஓ காதல் கண்மணி', 'சைத்தான்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ஆரவ்வும் ஒரு படத்தில் கதாநாயக னாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இருவரும் அடிக்கடி சந்திப்பதாகவும், இந்தச் சந்திப்புகள் ரகசியமாக நடப்பதாகவும் கூறப்படு கிறது.

இருவருக்கிடையே காதல் மலர்ந்தி ருப்பதாகவும் தகவல் கசிந்துள்ள நிலையில், ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் படத்தை வெளியிட்டுப் பரபரப்பைக் கூட்டியுள்ளார் ஓவியா. ஆனால் இருவரும் இதுகுறித்து வாய் திறக்கவில்லை. ஆரவ் பற்றி தம்மிடம் யார் பேசினாலும், "தயவு செய்து வேறு விஷயங்கள் குறித்து பேசுவோமே," என்று உடனடியாகத் தடை போட்டு விடுகிறாராம் ஓவியா. ரசிகர்கள்தான் குழம்பி நிற்கின்றனர்.