சூர்யாவுடன் ஜோடி சேர்ந்த சாயிஷா

சூர்யாவுடன் ஜோடி சேர்ந்த சாயிஷா

1 mins read
5137ad5a-1c6d-4b88-a913-b47e21f44089
-

முதன்முறையாக சூர்யாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார் இளம் நாயகி சாயிஷா. கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்க உள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வரும் 'என்ஜிகே' முடிவடைந்த கையோடு ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சாயிஷா ஒப்பந்தமாகி உள்ளதாக முன்பே தகவல் வெளியான போதிலும் அது உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் சாயிஷா நடிப்பது உறுதி என தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாயிஷா நம்ம சூர்யாவின் தீவிர ரசிகையாம். அவருடன் இணைந்து நடிப்பதால் ரொம்பவே உற்சாகத்தில் மிதப்பதாகத் தகவல்.

மேலும் செய்திகள்