ஹனிரோஸ்: மலையாளப் பட உலகில் பாலியல் தொல்லை

ஹனிரோஸ்: மலையாளப் பட உலகில் பாலியல் தொல்லை

1 mins read
3bb714b3-ef46-47b4-a91e-354bebd9a2ce
-

மலையாளப் பட உலகில் நடிகைகளுக்குப் பாலியல் தொல்லை இருப்பதாக நடிகை ஹனிரோஸ் தெரிவித்துள்ளார். இதனால் மலையாளக் கரையோரம் பரபரப்பு நிலவுகிறது. தமிழில் 'காந்தர்வன்', 'சிங்கம் புலி', 'மல்லுக்கட்டு' உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்துள்ளார் ஹனிரோஸ். இந்நிலையில் பட வாய்ப்புகள் தருவதாகச் சொல்லி சிலர் இளம் நடிகைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுப்பதாகச் சாடியுள்ளார். "அத்தகைய வாய்ப்புகளை ஏற்பதும் ஏற்காததும் நம் கையில்தான் உள்ளது. நடிக்க வாய்ப்பு கேட்கும் தொடக்க காலத்தில் எல்லா நடிகைகளுமே போராட வேண்டி உள்ளது. அப்போது சிலர் நடிகைகளை மூளைச்சலவை செய்கிறார்கள். எனவே நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்," என்கிறார் ஹனிரோஸ்.

மேலும் செய்திகள்