கைத்தொலைபேசியை வழிப்பறிக் கொள்ளையனிடம் பறிகொடுத்த சஞ்சனா

கைத்தொலைபேசியை வழிப்பறிக் கொள்ளையனிடம் பறிகொடுத்த சஞ்சனா

1 mins read
5a5b25f0-1ab8-449b-840d-db4b121148b1
-

பொதுமக்கள், குறிப்பாகப் பெண்கள் சாலையில் தனியே செல்லும்போது மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும் என்கிறார் நடிகை சஞ்சனா சிங். அவருக்குக் கிடைத்துள்ள அனுபவம் இப்படிச் சொல்ல வைத்திருக்கிறது. என்ன நடந்தது? சென்னை முகப்பேர் பகுதியில் வசித்து வரும் சஞ்சனா நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் உடற்பயிற்சிக்காக சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.

அண்ணாநகரில் உள்ள சகோதரி வீட்டுக்குச் சென்றுவிட்டு காலை 6 மணி அளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாராம். பாதையில் குழப்பம் ஏற்பட்டதால் கூகுள் மேப் பயன்படுத்தி சைக்கிளை ஓட்டி வந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் சஞ்சனாவைக் கடந்தபோது அவரது கைபேசியைப் பறித்துச் சென்றுவிட்டாராம். "எப்போதும் கவனமாக இருப்பேன். ஆனால், நானே ஏமாந்து விட்டேன். தங்கச் சங்கிலி அணிந்து செல்லும் பெண்கள் கவனமாக இருக்கவேண்டும்," என்கிறார் சஞ்சனா சிங்.

மேலும் செய்திகள்