நலமாக உள்ளேன்: தனுஷ் விளக்கம்

1 mins read
67dfe564-394f-479a-a62d-45052acb32b9
-

தாம் நலமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார் தனுஷ். எதற்காக இப்படியொரு விளக்கம் என்கிறீர்களா? வேறொன்றுமில்லை... படப்பிடிப்பின்போது தனு‌ஷுக்கு அடிபட்டதாகவும் அவர் படுகாயமடைந்துள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவியது. 'மாரி-2'க்காக நடைபெற்ற படப்பிடிப்பின்போது தனு‌ஷுக்கு அடிபட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் தனக்குப் பெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் ரசிகர்களின் பிரார்த்தனைக்கும் அன்புக்கும் நன்றி என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தனுஷ். "என் பலத்தின் தூண்களாகிய உங்களை மிகவும் நேசிக்கிறேன்," என்றும் தனுஷ் தமது பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்