அதர்வா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் 'செம போத ஆகாதே'. படத்தின் நாயகனும் இவர்தான். பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ளார். மிஷ்டி, அனைகா சோதி என இரு நாயகிகள் உள்ளனர். அர்ஜய், ஜான் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, பிரின்ஸ் நிதிக், ஆடுகளம் நரேன், யோகி பாபு, கும்கி அஸ்வின் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
"பாடல்களை நான், ஜி.ரோகேஷ், கே.ஜி.ரஞ்சித், நிரஞ்சன் பாரதி ஆகிய அனைவரும் எழுதியுள்ளோம். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பாடல்களுக்கு இளையர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தலைப்பு வேறு விதமாக யோசிக்க வைக்கலாம். ஆனால் நல்ல கருத்தை மட்டுமே சொல்லி இருக்கிறோம். இது அனைவருக்குமான படம். படக்குழுவினரின் கூட்டு முயற்சியும் உழைப்பும் எனக்கு மிகவும் கைகொடுத்தது," என்கிறார் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ்.

