சிம்புவும் வெங்கட் பிரபுவும் இணைந்து புதிய படத்தை வழங்க உள்ளனர். இதை 'வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்' சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிக்க உள்ளார். கதாநாயகி யாரென்பது முடிவாகவில்லை. மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வும் நடைபெற்று வருகிறது. பெயரிடப்படாத இப்படத்தை அடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில் 'விண்ணைத் தாண்டி வருவாயா' இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளார் சிம்பு. இதற்கிடையே மணிரத்னம் இயக்கி உள்ள 'செக்கச்சிவந்த வானம்' விரைவில் வெளியீடு காண உள்ளது.
வெங்கட்பிரபு, சிம்புவின் புதுக் கூட்டணி
1 mins read
-

