சிவகார்த்திகேயன் நடிக்கும் 13வது படத்தின் ('சிகே 13') படப்பிடிப்பு நேற்று தொடங்கி உள்ளது. முதன்முறையாக விஞ்ஞானத்தை மையப்படுத்தி உருவாகும் கதையில் நடிக்கிறார். படத்தை இயக்குபவர் ரவிகுமார். இவர் ஏற்கெனவே 'இன்று நேற்று நாளை' படத்தை இயக்கியவர். இம்முறை சிவாவுக்கு ஜோடியாக நடிப்பவர் ரகுல் பிரீத் சிங். கருணாகரன், யோகி பாபு, பானுப்ரியா, இஷா கோபிகர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். ஏ.ஆர். ரகுமான் இசை யமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படம் தயாராகிறது. இதற்கிடையே பொன்ராம் இயக்கத்தில் 'சீமராஜா' படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
சிவாவின் 13வது படம் தொடங்கியது
1 mins read
-

