இலியானா குணத்தை மாற்றிய காதலர்

இலியானா குணத்தை மாற்றிய காதலர்

1 mins read
5c63c7cb-c050-4426-a63a-89ae4e4aa9fd
-

மன அழுத்தத்துக்கு ஆளாகும்போது யாரையும் சந்திக்காமல் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பாராம் இலியானா. அப்படிப்பட்ட தருணங்களில் யாரேனும் தன்னைத் தொடர்பு கொண்டால் கண்டபடி ஏசிவிடுவாராம். இத்தகைய குணாதிசயத்தை மாற்றி அமைத்தது தனது காதலர் ஆண்ட்ரூ தான் என்கிறார் இலியானா. "எனக்கு திருமணம் ஆகவில்லை. நான் தாய்மை அடைந்திருப்பதாகக் கூறப்படுவதும் தவறான தகவல். எனினும் அவ்வாறு விரைவில் நடக்க வேண்டும் என்பதே என் விருப்பம். "என் காதலர் என்னைப் புரிந்து கொண்டவராக இருக்கிறார். மன அழுத்தத்துக்கு நான் ஆளாகும்போது எல்லாம் முதலில் ஆண்ட்ரூவைத்தான் தேடுவேன். அவர் அந்த அளவுக்கு எனக்கு ஆறுதலாக இருப்பார்," என்கிறார் இலியானா.