நாயகி வரவுக்காக காத்திருக்கும் தனுஷ்

1 mins read
69d04e9c-86c7-439e-88c9-b82961df2ea2
-

'மாரி 2' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந் துள்ளது. ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும்தான் எடுக்க வேண்டியுள்ளதாம். ஆனால் இப்படத்தின் நாயகி சாய் பல்லவியின் கால்‌ஷீட் கிடைக் காததால் நாயகன் தனுஷ் உட்பட ஒட்டுமொத்த படக் குழுவும் காத்துக் கிடக்கிறது. பாலாஜி மோகன் இயக் கத்தில் உருவாகி உள்ளது 'மாரி 2'. இதில் தனுஷ், சாய் பல்லவி முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். இப்படத்தின் வசனப் பகுதியை எப்போதோ படமாக்கி விட்ட னர்.

இந்நிலையில் சூர்யாவுடன் 'என்ஜிகே' படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சாய் பல்லவி. இதன் காரணமாக 'மாரி 2' படத்தின் பாடல் காட்சிக்கான படப்பிடிப்பில் பங்கேற்க அவ ரால் கால்‌ஷீட் கொடுக்க முடிய வில்லையாம். 'என்ஜிகே' படப் பிடிப்பும் முடியும் தருவாயில் இருக்கிறது. சாய் பல்லவி ஏற் கெனவே கொடுத்த கால்‌ஷீட் முடிந்துவிட்டதால் அவரை வற்புறுத்தாமல் 'என்ஜிகே' படம் முடிவதற்காகக் காத் திருக்கிறது 'மாரி 2' படக்குழு.

'மாரி 2' படப்பிடிப்பின்போது தனுஷ், சாய் பல்லவி உள்ளிட்ட படக்குழுவினர்.