விஜய்க்காக உருவாகும் அதிரடிக் கதை

1 mins read
bae90183-f41e-44c9-8d25-76ef023326d4
-

நடிகர் விஜய்க்காக ஓர் அதிரடிக் கதையை உருவாக்கி வருகிறாராம் இயக்குநர் பேரரசு. இன்று விஜய் ஓர் அதிரடி நாயகனாக வளர்ந்திருப்பதற்கு பேரரசும் பங்களித்துள்ளார். விஜய் நடிப்பில் வெளியான 'திருப்பாச்சி', 'சிவகாசி' ஆகிய இரு படங்களுமே இவரது இயக்கத்தில் உருவானவை. விமர்சன, வசூல் ரீதியில் அவ்விரு படங்களும் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றன. அதன்பிறகே விஜய்யின் சந்தை மதிப்பு கிடுகிடுவென உயர்ந்தது. கோடிக்கணக்கில் சம்பளம் பெறும் நாயகனாக அவர் வளர்ச்சி கண்டார். தன் திரை வாழ்க்கையில் திருப்புமுனையை அளித்த இயக்குநருக்குக் கைக்கொடுக்கும் விதமாக, தனக்கென ஒரு வித்தியாசமான கதையை எழுதுமாறு பேரரசுவிடம் கூறியுள்ளாராம் விஜய். இதனால் உற்சாகமடைந்த பேரரசு கதை, திரைக்கதையை உருவாக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளாராம்.