'நான் தாடியை எடுக்கத் தயார்'

'நான் தாடியை எடுக்கத் தயார்'

1 mins read
17d4a210-e42c-4775-b4c2-8f3da2ff63d8
-

நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய நகரம் சார்ந்த கதையில் நடிப்பதற்கு நான் எப்போழுதும் தயாராகவே இருக்கிறேன். அந்தக் கதாபாத் திரத்துக்கு தாடி ஒரு தடை என்று யாராவது நினைத்தால் அதை எடுக்கவும் நான் தயார் என்று கூறியுள்ளார் சசிகுமார். 'சுப்பிரமணியபுரம்' முதல் இன் றைக்கு நடித்து வரும் 'அசுரவதம்' படம் வரை தாடியுடனே நடித்து வருகிறார் சசிகுமார். 'கிராமத்தை விட்டு நவீன தோற்றத்துக்கு வரவே மாட்டீர் களா?' என்ற கேள்விக்கு சசி குமார் பதில் அளித்துள்ளார்.

"கிராமக் கதைகளைவிட்டு நக ரத்துக்கு வரமாட்டேன் என்று நானா அடம்பிடிக்கிறேன்? கதை சொல்ல வரும் இயக்குநர்கள் பலரும் என்னை கிராமத்துக்குத் தான் அழைத்துச் செல்கிறார்கள். "அசுரவதம்' பட இயக்குநர் மது பாண்டியன்தான் என்னை ஊட்டிக்கு அழைத்துச் சென் றிருக்கிறார். "மீண்டும் எப்போது படம் இயக்குவீர்கள் என்கிறார்கள். சில சுமைகள் என் மீது இருக்கின்றன. அவை தீரும்வரை தொடர்ந்து நடிக்கவே முடிவு செய்துள்ளேன். "வழக்கமான எனது முத்திரை எதுவும் 'அசுரவதம்' படத்தில் இருக்காது. நிற்க நேரம் தராமல் என்னை ஆக் ஷன் செய்ய வைத் துப் புரட்டி எடுத்திருக்கிறார் திலீப் சுப்பராயன்.

'அசுரவதம்' படத்தில் இடம்பெறும் காட்சி.