மீண்டும் கூட்டுசேரும் பார்த்திபன், வடிவேலு

மீண்டும் கூட்டுசேரும் பார்த்திபன், வடிவேலு

1 mins read
8f64b180-42da-4aa7-a5bf-784d0abda8b0
-

பொழுதுபோகாதவர்கள் அதிகம் பார்த்து ரசிப்பது நகைச்சுவைக் காட்சிகளைத்தான். அவ்வகையில் பார்த்திபன்-வடிவேலு கூட்டணி யில் வெளியான நகைச்சுவைக் காட்சிகளும் ரசிகர்களிடத்தில் அமோக வரவேற்பைப் பெற் றவை. இந்தக் கூட்டணி மீண்டும் இணையாதா என்று ரசிகர்கள் ஏங்கிய நிலையில் தற்போது இணைய உள்ளனர்.

'கன்னிராசி', 'களவாணி 2' படங்களில் நடித்தும் வரும் விமல், அடுத்தபடியாக சுராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் வடிவேலு ஏற்கெனவே இணைந்த நிலையில் இப்போது பார்த்திபனும் இணைய உள்ளார். விமலும் வடிவேலுவும் காவல்துறை யினராக நடிக்கின்றனர். 'மருதமலை' படம் அளவுக்கு நகைச்சுவை கலந்த ஜனரஞ்சகமான படமாக இப்படம் உருவாக உள்ளது.

மேலும் செய்திகளுக்கு