ராஜமவுலி படத்தில் நடிக்க விரும்பும் அதிதிராவ்

ராஜமவுலி படத்தில் நடிக்க விரும்பும் அதிதிராவ்

1 mins read
20d427c0-b327-42d1-98c7-1a7b087e5eb0
-

நடிகை அதிதிராவ் ஹைதரி. தற்போது 'செக்கச்சிவந்த வானம்' படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும், இந்தியில் பத்மாவத் உள்பட படங்களில் நடித்துள்ள இவர், கடந்த ஜூன் 15ஆம் தேதி வெளியான 'சம்மோகனம்' தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் அவரது நடிப்பை ராஜமவுலி உள்ளிட்ட பலரும் பாராட்டியிருந்தனர். இந்நிலையில், தனது டுவிட்டரில் ரசிகர்களின் கேள்விக்குப் பதிலளித்த அதிதிராவ் ஹைதரி, ராஜமவுலியின் பாராட்டுக் குறித்துக் கூறுகையில், அவரது பாராட்டு, காவியப்பட கலைஞரான அவரது இயக்கத்தில் நடிக்கவேண்டும் என்கிற ஆர்வத்தையும் தூண்டி விட்டுள்ளது. ஏற்கெனவே பல இயக்குநர்களின் படங்களில் நடித்துள்ள எனக்கு ராஜமவுலி படத்தில் நடிக்க வேண்டும் என்ற கனவும் விரைவில் நிறைவேறும் என எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.