தமன்னா: யோகாசனம் இன்றி ஒருநாள்கூட கழியாது

தமன்னா: யோகாசனம் இன்றி ஒருநாள்கூட கழியாது

2 mins read
09eae187-5c9e-4797-a1f0-e7c01fa0b6af
-

யோகாசனம் இல்லாமல் தமக்கு ஒரு நாள் கூட நகராது என்கிறார் தமன்னா. மன அழுத்தத்தில் இருந்து விடுபட தமக்குக் கைகொடுப்பது யோகாசனம் தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார். "திரையுலகில் கால்பதித்தபோது எப்படி இருந்தேனோ அதே தோற்றத் திலேயே நீடித்திருப்பது பெரிய விஷயம் என்று குறிப்பிட்டு பலரும் என்னைப் பாராட்டுகிறார்கள். இதற்காக யோகா வுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். "நாம் அழகு, அமைதியுடன் மன அழுத்தமும் இன்றி இருப்பது மிக முக்கியம். இதற்கு நான் யோகாவைத் தான் நம்புகிறேன். எனது ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் யோகாவிலேயே கழிகிறது," என்று சொல்லும் தமன்னா, தினமும் காலையில் ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி செய்வாராம்.

முதல் அரை மணி நேரம் சாதாரண உடற்பயிற்சி செய்பவர், அடுத்த அரை மணி நேரத்தை யோகாவிலும் தியா னத்திலும் கழிக்கிறார். தனக்காக வீட்டிலேயே ஓர் உடற்பயிற்சிக் கூடத்தை அமைத்துள் ளாராம். உடலில் இருக்கும் நச்சுத்தன்மை அகலவும் சருமம் அழகாகவும் யோகா கைகொடுக்கும் என்கிறார் தமன்னா. "மனதில் எதிர்மறை எண்ணங்கள் தோன்றாது. சினிமா என்பது நெருக் கடி, சவால்கள் நிறைந்த தொழில். சரியான தூக்கம் இருக்காது. நேரத் துக்கு சாப்பிட முடியாது. "உடல் ரீதியாகவும் மன ரீதியாக வும் அழுத்தம் இருக்கும். இதில் இருந்து விடுபட ஒரே மருந்து யோகாதான்," என்கிறார் தமன்னா. உணவு வி ஷயத்தில் மிக கவனமாக இருப்பாராம். உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள அதிகளவு தயிர் சாப்பிடுவாராம். "தண்ணீர், பழச்சாறுகள், இளநீர் பருகுவதும் முக்கியம். நொறுக்குத் தீனிகளை அறவே தொடுவது இல்லை. சீனியை விரோதியாகக் கருதி அதில் இருந்து தள்ளியே இருப்பேன். இது தான் எனது கட்டுக்கோப்பான உடல் அமைப்புக்கு காரணம்," என்று சொல்கிறார் தமன்னா.