சின்னத்திரை மூலம் பிரபலமான கவின், நாயகனாக அறிமுகமாகும் படம் 'நட்புனா என்னானு தெரியுமா'. இதில் அவரது ஜோடி ரம்யா நம்பீசன். அருண் ராஜா காமராஜ், ராஜு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். எதிர்வரும் 20ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. சிவகுமார் இயக்கி உள்ள இந்தப் படம், இளையர்களை நிச்சயம் கவருமாம். மூன்று இளையர்கள் ஒரே பெண்ணைக் காதலிக்கிறார்கள். யாருக்கு காதல் கைகூடுகிறது என்பதுதான் கதை. "இளையர்கள் எதிர்பார்க்கும் அத்தனை அம்சங்களும் இருக்கும். நகைச்சுவைக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்திருக்கிறோம்," என்கிறார் இயக்குநர்.
'நட்புனா என்னானு தெரியுமா'
1 mins read
-

