"முத்தக் காட்சிகளில் நடிக்க இயலாது"

"முத்தக் காட்சிகளில் நடிக்க இயலாது"

1 mins read
b335c5f5-6dbd-4835-816e-950e5e008b9e
-

கவர்ச்சியாக நடிக்க மறுப்பதால் தனக்கான வாய்ப்புகள் குறைந்து விட்டதாக கூறப்படுவதைத் திட்டவட்டமாக மறுக்கிறார் கீர்த்தி சுரேஷ். 'நடிகையர் திலகம்' படத்தில் தனது நடிப்பை அனைத்துத் தரப்பினருமே பாராட்டி இருப்பதாகவும், இது மிகுந்த மகிழ்ச்சியை அளித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். எத்தகைய சவாலான கதாபாத்திரங்களையும் ஏற்பதற்கு கீர்த்தி தயாராம். ஆனால், முத்தக் காட்சியில் நடிக்க இயலாது என்கிறார். "இதுவரை நான் நடித்த எந்தப் படத்திலும் கவர்ச்சியோ, முத்தக் காட்சியோ இடம்பெறவில்லை. அதற்கான வாய்ப்பு இல்லாத படங்களே எனக்கு அமைந்தன. இதுவரை எந்த இயக்குநரும் முத்தக்காட்சியில் நடிக்க வேண்டும் என்று என்னை நிர்ப்பந்தித்தது இல்லை. "என்னால் அத்தகைய காட்சிகளில் நடிக்க முடியாது. இயல்பாகவே எனக்குக் கூச்ச சுபாவம் உண்டு. காதல் காட்சிகளில் நடிக்கவே வெட்கப்படும் என்னால், எப்படி கவர்ச்சியாக நடிக்க முடியும்?" என்று கேள்வி எழுப்புகிறார் கீர்த்தி.