காவல்துறை அதிகாரி வேடத்தில் பரத்

காவல்துறை அதிகாரி வேடத்தில் பரத்

1 mins read
1cefe268-f550-499c-9bd7-0df1a277f3e9
-

காவல்துறை அதிகாரியாக நடிப்பது உற்சாகம் அளிப்பதாகக் கூறுகிறார் பரத். 'நாளைய இயக்குநர்' தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான ஸ்ரீசெந்தில் இயக்கும் படம் 'காளிதாஸ்'. இதில் பரத்துக்கு காவல்துறை அதிகாரி வேடம். அதிர வைக்கும் திரைக்கதை, சண்டைக்காட்சிகளுடன் உருவாகிறது இப்படம். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை உரிமையை ட்ரெண்ட் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாம். இதையடுத்து படத்தின் முன்னோட்டக் காட்சிகள் வரும் 6ஆம் தேதி வெளியாக இருப்பதாக பரத் தெரிவித்துள்ளார். சென்னை, ஹைதராபாத் என பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.