"அம்மா வேடத் தில் நடிப்பாயா என்று மட்டுமே கேட்டார். நடிக்கத் தயார் என்று நான் கூறியபிறகே கதை கேட்கச் சொன்னார். என்னைப் பொறுத்த வரை எந்த வேடத்திலும் நடிக்கத் தயார்," என்கிறார் நந்திதா. அடுத்து 'டாணா' என்ற படத் தில் கவர்ச்சியான, நாகரிகப் பெண் ணாக நடிக்கிறாராம். 'வணங்காமுடி' யில் போலிஸ் வேடத்தில் வருவா ராம். ஒரு கதையில் தனக்கான கதாபாத்திரம் முக்கியத்துவம் பெற்றுள்ளதா என்பதை மட்டுமே கவனிப்பதாகக் குறிப்பிடுபவர் நல்ல கதையில் நடிப்பது மட்டுமே குறிக் கோள் என்கிறார்.
ரஞ்சித் அறிமுகம் செய்த நடிகை என்றபோதிலும் அவரது அடுத் தடுத்த படங்களில் நந்திதாவுக்கு அவர் வாய்ப்பளிக்கவில்லை. இத னால் வருத்தமாக உள்ளதா என்று கேட்டால், எதற்காக வருத்தப்பட வேண்டும் என்று சிரித்தபடியே கேள்வி எழுப்புகிறார். ரஞ்சித் அண்மையில் இயக்கிய படங்களில் எனக்கு ஏற்ற கதா பாத்திரம் என்று எதுவும் இல்லை. இதை நன்கு உணரமுடிந்தது. பொருத்தமான வேடங்கள் இருந் தால் நிச்சயம் என்னை அழைப்பார். அதுவரை காத்திருப்பேன். காதல்? "அதற்கெல்லாம் நேரமே இல்லை. தொடர்ந்து படப்பிடிப்புகளில் பங் கேற்பதற்குக் கூடுதல் நேரம் தேவைப்படுகிறது. எனவே, என் கவனம் முழுவதும் சினிமாவில்தான் உள்ளது," என்கிறார் நந்திதா.

