அரவிந்த்சாமியின் அடுத்த படம்

1 mins read
15eb98e8-406e-4b02-a9ba-99615b13da12
-

அரவிந்த்சாமி நடிப்பில் 'சதுரங்க வேட்டை-2', 'நரகாசுரன்', 'செக்கச் சிவந்த வானம்' ஆகிய மூன்று படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. தற்போது செல்வா இயக்கத்தில் 'வணங்காமுடி'யில் நடித்து வருகிறார். இந்நிலையில் இயக்குநர் ராஜபாண்டியின் புதிய படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார் அரவிந்த்சாமி. 'என்னமோ நடக்குது', 'அச்சமின்றி' ஆகிய படங்களை இயக்கியவர் ராஜபாண்டி. இவரும் அரவிந்த்சாமியும் இணையும் படத்துக்கான படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் துவங்குகிறது. இந்நிலையில் கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறதாம். அநேகமாக லட்சுமி மேனன், திரிஷா ஆகிய இருவரில் யாரேனும் ஒருவர் ஒப்பந்தமாகலாம் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே இப்படக்குழுவினர் அமலா பாலுடன் பேசிக்கொண்டிருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.