எந்த மொழிப் படமாக இருந்தாலும் தனக்குரிய முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்வதாகச் சொல்கிறார் பிரியா ஆனந்த். பெரிய நடிகர்களுடன் ஜோடி சேர முடிய வில்லை என்கிற வருத்தம் தமக்கு அறவே இல்லை என்றும் அவர் அண் மைய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். 'எதிர்நீச்சல்', 'வணக்கம் சென்னை' உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பிரியா ஆனந்த். தொடக்கத்தில் மளமளவென படங் களை ஒப்புக்கொண்டு நடித்து வந்தவரை சில காலமாகத் தமிழில் பார்க்க முடிவதில்லை. குறிப்பிட்ட இடைவெளிக்குப் பிறகு ஆர்.ஜே. பாலாஜி ஜோடியாக 'எல்கேஜி' என்ற படத்தில் நடித்துக் கொண் டிருக்கிறார் பிரியா. இது அரசியலை நையாண்டி செய்யும் கதைக்களம் கொண்ட படம்.
"ஆர்.ஜே. பாலாஜி திறமையான நடிகர். அனைவரையும் சிரிக்கவைக்கும் திறமை கொண்டவர். அவர் நாயகனாக நடிக்கும் படத்தில் நானும் நடிக்கிறேன் என்பது உற்சாகமளிக்கிறது. இது வித்தியாசமான கதை என்று தோன்றிய தால்தான் தயக்கமில்லாமல் நடிக்க ஒப்புக்கொண்டேன்," என்கிறார் பிரியா. விஜய், அஜித் போன்ற முன்ணணி நாயகர்களுடன் ஜோடி சேர முடியவில்லை என்ற வருத்தம் இருக்கிறதா?
"அப்படியெல்லாம் ஏதுமில்லை. ஒரு விஷயத்தை வெகுவாக எதிர்பார்த்துக் காத்திருக்கும்போது, நாம் நினைத்தது நடக்கவில்லை என்கிற நிலை ஏற்பட் டால்தான் வருத்தம் உண்டாகும். எனக்கு அப்படி ஒரு நிலை உருவான தில்லை.
"ஏனெனில் நீங்கள் குறிப்பிட்ட எதிர் பார்ப்பு எனக்கு இல்லை. பெரிய நடிகர் களுடன் ஜோடி சேரவேண்டும் என்று நினைத்தால்தானே வருத்தம் ஏற்படும்? "என்னுடைய பாதை வேறு, எனது ஆர்வ மும் வேறு. நான் எப்போதுமே படங்களின் எண்ணிக்கையைக் கவ னிப்பதில்லை. சம்பளத்துக்காக மட்டும் நடித்ததும் இல்லை. "நான் சினிமாவை முழுமையாக நேசிக்கிறேன். அதனால்தான் இந்தத் துறைக்கு வந்திருக்கிறேன். எனவே இதில் வருத்தம், சோகம் என்பதற் கெல்லாம் அறவே இடமில்லை."
பிரியாவுக்கு பல மொழிகள் அத்துப் படியாம். அதனால் எந்த மொழிப் படமென்றாலும் தயக்கமின்றித் தேடி வரும் வாய்ப்பை ஏற்றுக்கொள்கிறார்.

