டுவிட்டர் தளத்தில் தன்னைப் பின்தொடரும் தீவிர ரசிகருக்கு நன்றி தெரிவித்துள்ளார் சமந்தா. இதனால் அந்த ரசிகர் மிகுந்த உற்சாகத்தில் மூழ்கியுள்ளார். "டுவிட்டரில் உங்களைப் பற்றி ஆயிரம் முறையாவது பதிவிட் டிருப்பேன். ஆனால் இன்று வரை நீங்கள் (சமந்தா) ஒருமுறை கூட பதில் அளித்ததில்லை. "ஆனாலும் உங்கள் மீதான அன்பு 0.001 அளவு கூட குறைந்ததில்லை. உங்களை நேசிக்கிறேன்," என்று அந்த ரசிகர் அண்மையில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து அந்த ரசிகருக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார் சமந்தா. இதைக் கண்டு பூரித்துப் போன அந்த ரசிகர், "நான் வெற்றி பெற்றுவிட்டேன். பெரிதாக சாதித்ததாக உணர்கிறேன்," என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
ரசிகருக்கு நன்றி தெரிவித்த சமந்தா
1 mins read
-

